ஜெபவரிசை (PRAYER LINE) ராபர்ட்ஸ் பார்க் அடுக்கு இருக்கை அரங்கு, கானர்ஸ்வில், இந்தியானா, அமெரிக்கா 53-0600 வெளியே ஒரு ஜெப அட்டை. அது சரியே. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, அந்தக் கூட்டத்தாரை இங்கே முதலில் மேடைக்கு இறங்கி நடந்து வரும்படிக்கு விடுங்கள் அப்படியே ஜெப அட்டை இல்லாதவர்களை. இப்பொழுது, ஒரு நிமிடத்தில் நான் ஜெப அட்டைகளைப் பெற்றுக்கொள்ளப் போகிறேன். நாம் சரியாக கட்டிடத்தினூடாக தேடுவோம்; நம்மால் கூடுமானவரையில் எல்லாருக்கும் ஜெபிக்கும்படி விரும்புகிறோம். இப்பொழுது, இப்பொழுது, இங்கே உள்ளேயுள்ள எத்தனை பேர் ஜெபத்தில் இருக்கப் போகிறீர்கள்? இப்பொழுது, இங்கே சுற்றிலுமுள்ள எல்லாரையும் இந்த மற்ற வரிசைகளில் அழைக்கப் போகிறேன், எனவே நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்... [ஒலிநாடாவில் காலியிடம் ஆசிரியர்.] சரி. இப்பொழுது இப்பொழுது இப்பொழுது, நீங்கள் வரலாம்... நிறுத்துங்கள்... நல்லது, அது போதும், ஏனென்றால் நீங்கள் வரிசையில் மிக நீளமாக நின்று கொண்டிருக்க வேண்டியிருக்கும். இப்பொழுது, எல்லாரும்.... நான் இந்த ஜனங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கையில், இங்கேயுள்ள எத்தனை பேர், நீங்கள் -நீங்கள் ஜனங்களுக்காக ஜெபிப்பீர்கள் என்று இந்த வாக்குறுதி அளிப்பீர்கள்? ஒரு பகுத்தறியும் வரம் அல்லது தீர்க்கதரிசன வரமாக இருக்கிற, இந்த வரத்தை தேவன் கொடுத்தார் என்று இப்பொழுது இங்கேயிருக்கிற எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள், அது... நண்பர்களே, இதை மாத்திரம் செய்ய வேண்டாம். இரக்கம், அது... நிங்கள் அந்தப் புத்தங்களை வாசித்திருக்கிறீர்கள், இல்லையா? இதனூடாக கர்த்தர் செய்திருக்கிற பத்தாயிரக்கணக்கான காரியங்களுக்கு முடிவேயில்லை. ஆனால் இப்பொழுது, காத்திருங்கள். வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படியாக அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது என்னுடைய கடமையாக இருக்கிறது. இப்பொழுது, இப்பொழுது, நாம் பார்க்கலாம்... இப்பொழுது, சற்று பொறுங்கள். இப்பொழுது, உங்களுக்கு விருப்பமானால், இன்னும் கூடுதலாக எவரையும் எழுந்து நிற்கச் செய்யாதீர்கள், பிறகு நான் வேறொரு அழைப்பைக் கோடுப்பேன். பாருங்கள்? நம்மால் கூடுமான ஒவ்வொருவரையும் ஜெபிக்கப்படும்படியாக கொண்டுவரவே நாம் விரும்புகிறோம். சரி, மகனே, நீ அங்கே ஏறக்குறைய ஆயத்தாக இருக்கிறாயா? கொண்டு வருவது இந்த வரிசையில் மிக அதிகமானோரை கொண்டு வர வேண்டாம், ஏனென்றால் நாம் மிக அதிகமானோரைக் கொண்டு வந்தால், ஏன், நாம் தொல்லைக்குள்ளாவோம். புரிகிறதா? இப்பொழுது, எப்படி... இங்கே நின்று கொண்டிருக்கும் ஜனங்களே, இப்பொழுது, எனக்கு உங்களைத் தெரியாது; நான் உங்களை ஒருபோதும் கண்டதில்லை; ஜெப அட்டை பெற்றிராதவர்கள், அதைக் குறித்து ஒன்று மில்லை, ஆனால் உங்களுடைய விசுவாசத்தைக் கொண்டு விசுவாசித்து, நான் தேவனிடம் வேண்டிக்கொண்டால், நீங்கள் சுகமடைவீர்கள் என்று விசுவாசிப்பீர்களா? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? துவக்கம் முதல் இருக்க எல்லாரும் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, நீங்கள் விசுவாசிக்காவிட்டால், வராதீர்கள் (புரிகிறதா?), ஏனென்றால் அது உங்களுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக, அது உங்களுக்கு கெடுதி தான் செய்யும்; வேதாகமம், “போ, இனி - இனி பாவம் செய்யாதே?” என்று கூறுகிறது. வேதாகமம் அவ்வாறு கூறுகிறது என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? நல்லது, பாவம் என்பது என்ன? அவிசுவாசம். அவிசுவாசம் தான் பாவம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்; அங்கேயுள்ள ஒரே பாவம் அதுதான், அதுதான் அவிசுவாசம். "விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டாயிற்று." அது சரிதானா? நீங்கள் கூட செய்யவில்லை, நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு வட்டீர்கள். பாருங்கள்? பொய் சொல்லுதல், திருடுதல், மது அருந்துதல், மேலும் மற்றவைகள், அவைகள் பாம் அல்ல, அது பாலத்தின் தன்மைகள் ஆகும். நீங்கள் விசுவாசியாத காரணத்தினால் தான் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் அந்தக் காரியங்களைச் செய்ய மாட்டீர்கள். புரிகிறதா? அவை தன்மைகளாக இருக்கின்றன. எனவே இப்பொழுது நீங்கள் வந்து கொண்டிருப்பீர்களானால், விசுவாசித்தவர்களாக வாருங்கள், அல்லது ஒரு மோசமான காரியம் உங்கள் மேல் வரும். நீங்கள் வெறுமனே இதனூடாகப் போவதற்கு வருவது போன்றோ, புராண காரியங்களைக் குறிப்பிடும் கம்பம் (totem pole) அல்லது ஏதோவொன்றைத் தொடுவது போன்றோ வர வேண்டாம். இப்பொழுது, வரிசையில் நின்று கொண்டிருக்கிற உங்களில் மற்றவர்கள், இப்பொழுது எல்லாருமே, நாம் மிகத் துரிதமாக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம்.